இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத நீர்தேக்க தொட்டி
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் 36 லட்சத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியும் அதற்கான போர்வெல் 6 லட்சத்திலும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் கிடைக்கிறது.;
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூர் கிராம ஊராட்சியில் புதிய குடியிருப்பு பகுதியில் பயன்பாட்டிற்கு வராமல் 36 லட்சம் மதிப்பிலான வீணான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ஒன்பது லட்சம் மதிப்பிலான போர்வெல் அமைப்புகளும் பயன்பாட்டில் இல்லாமல் பாழாகி வருகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனைவருக்கும் குடிநீர் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட மத்திய அரசு திட்டமான ஜல் ஜீவன் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களிலும் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு, அதன் பேரில் வீடு தோறும் குழாய் இணைப்பு மற்றும் புதிய குடியிருப்பு பகுதிகளில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் ஊராட்சியில் கடந்த 2020- 21ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்பு பகுதியான காஞ்சி டவுன் பகுதியில் சுமார் 39.60 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
மேலும் அதன் அருகில் 15 ஆவது மானிய நிதி குழுவின் சார்பில் ஆறு புள்ளி ஐந்து லட்சம் மதிப்பில் போர்வெல் மற்றும் குடிநீர் அளிக்கும் வகையில் பைப் லைன்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இது காட்சி பொருளாகவே ஆகியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட பைப் லைன்கள் அனைத்தும் சேதுமடைந்ததால் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் அப்பகுதியில் புதியதாக குடியேறிய குடியிருப்புகளுக்கு குடிநீர் அளிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
அனைவருக்கும் குடிநீர் என்ற திட்டத்தின் கீழ் இங்கு அமைக்கப்பட்ட தொட்டி மற்றும் போர்வெல்லின் மதிப்பு சுமார் 46 லட்சம் பயனற்று வீணாய் போய் அதன் பொருள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ள நிலையில் குடிமையமாக தற்போது அந்த இடம் மாறி உள்ளது.
குடிநீர் தொட்டியின் காரைகள் அனைத்தும் பெயரந்தும் , மீட்டர் உள்ளிட்டவைகள் உடைக்கப்படும் அதை சுற்றிலும் உடைந்த மது பாட்டல்களின் சிதறல்களாகவே காணப்படுகிறது.
அப்பகுதியில் குடி பெயர்ந்த மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கிராமத்தில் வரும் குடிநீரை கண்களின் மூலம் எடுத்து வரும் நிலையும் தற்போது வரை உள்ளது.
இன்னும் சில தினங்களில் ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிய மாவட்டத்திற்கான விருதினை காஞ்சி மாவட்ட ஆட்சியர் டெல்லியில் பெற உள்ள நிலையில் இரண்டு வருடங்களாக கட்டிய குடிநீர் தொட்டி பயனில்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.