காஞ்சிபுரத்தில் நீர் ஆதாரமான கிராம குளங்கள் சீரமைப்பில், ஊராட்சி முகமை

காஞ்சிபுரத்தில் பருவ மழைக்கு முன்பு கிராம குளங்களை நீர் ஆதாரங்களாக்கும் பணி, ஊராட்சி முகமை சார்பில் தீவிரமாக நடைபெறுகிறது.

Update: 2021-08-03 13:30 GMT

 மாகரல் ஊராட்சியில் அமைந்து உப்புகுளத்தை நீர்பிடிப்பு பகுதியாக மாற்றும் பணியில் பணியாளர்கள்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படுவது வழக்கம். இதுமட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான கிராம ஊராட்சி குளங்களும் இம் மாவட்டத்தில் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறு குளங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே புனரமைக்கப்பட்டு நீர்நிலைகள் ஆகவே மாற்றப்பட்டு வருகிறது.

இப்பணிகளை ஊராட்சி வளர்ச்சி முகமை  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வரும் சில மாதங்களில் பருவ மழை காலம் துவங்க உள்ளதால் அதற்கு முன்பாகவே கிராம ஊராட்சி குளங்களில் புனரமைக்கப்பட்டு நீர்நிலைகள் ஆக்கி கால்நடைகள் மற்றும் கிராம விவசாய கிணறுகளில் நீர் ஆதாரம் பெருக்க இது உதவும்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் உள்ள உப்புகுளத்தினை அக்கிராம நூறு நாள் பணியாளர்கள் கொண்டு குளத்தில் உள்ள செடிகளை அப்புறப்படுத்துதல்,  குளத்தை நீர்ப்பிடிப்புக்காக சிறு சிறு மண் குட்டைகளை உருவாக்குதல் என பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

Similar News