காஞ்சிபுரம் அருகே ரூ 50 லட்சம் மதிப்பிலான அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

களக்காட்டூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த 5.5 ஏக்கர் நிலத்தை வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன் குழுவினர் மீட்டனர்;

Update: 2022-07-21 09:15 GMT

 களக்காட்டுர்‌ ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த 5.5 ஏக்கர் நிலத்தினை, மாகரல் காவல்துறை பாதுகாப்புடன் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட வட்டாட்சியர் லோகநாதன்.

உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியதின் பேரில்  ஆக்கிரமிப்பிலிருந்த நீர்நிலை மற்றும் அரசு நிலங்களை மீட்க அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும்  முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில்பல நூறு அரசு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு குறித்து தொடர் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.அவ்வகையில் வாலாஜாபாத் வட்டம், களக்காட்டூர் ஊராட்சியில் சர்வே எண்664ல் உள்ள 5.5ஏக்கர் தாங்கல் புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்யவுள்ளதாக வட்டாட்சியர் லோகநாதனுக்கு கிராம நிர்வாக அலுவலர் பாபு புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் குறுவட்ட ஆய்வாளர் விஜியகுமார் தலைமையில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மாகரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு தாசில்தார் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை குழுவினர் ஜேசிபி இயந்திர உதவியுடன் நிலத்தினை மீட்டனர். நிலம் மீட்கப்பட்ட நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் D.நளினிடில்லிபாபு‌, துணைத்தலைவர் A.பாலாஜி மற்றும் கிராம உதவியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.ஆக்கிரமிப்பிலிருந்த மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ50 லட்சம் என தெரியவருகிறது.


Tags:    

Similar News