திருமுக்கூடல் பாலாற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை மீட்பு
திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கண்ட நபர்கள் வாலாஜாபாத் வட்டாட்சியருக்கு தகவல் அளித்து சிலை மீட்பு.;
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சாமி சிலை இருந்ததை கண்டெடுத்துள்ளனர்.
உடனே சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த சாலவாக்கம் போலீசார் இரண்டு அடி உயரம் கொண்ட குதிரை வாகனத்துடன் கூடிய சாமி சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தால் சாமி சிலை ஆற்றில் அடித்து வந்ததா அல்லது ஆற்றங்கரையோரம் உள்ள சிறு கோயில்களில் காணமல் போய் உள்ளதா என வருவாய் துறையினர் சாமி சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.