புளியம்பாக்கம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே புளியம்பாக்கம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.;
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் பாலாற்றின் வடகரையில் ஜெகன் மாதா ஸ்ரீ அகிலண்டேஸ்வரி ஸ்ரீ அகத்தியமாமுனிவர் கைலாசம் செல்லும் பாதையில் புளியம்பாக்கம் கிராமத்தில் சிவ பூஜை செய்ததின் பலனாக அத்தீஸ்வரர் என்று பெயர் கொண்டு அருள் பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரி அகத்தீஸ்வரர் கோவில் 800 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாக திகழ்ந்து வந்தது.
இக்கோயிலை புளியம்பாக்கம் கிராம பொதுமக்கள் திருப்பணி செய்தனர் அதன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பூஜைகளும் பரிகாரங்களும் செய்து , நான்காம் கால யாக பூஜையும் காலை கலச புறப்படும் பூஜைகளும் நடைபெற்று ஸ்ரீ கணபதி , ஸ்ரீ பாலமுருகன் , ஸ்ரீ அகத்திய மாமுனிவர் கோஷ்ட தெய்வமாக ஸ்ரீ நர்த்தன கணபதி , ஸ்ரீ தட்சிணாமூர்த்தி , ஸ்ரீ மகாவிஷ்ணு , ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ துர்க்கை , ஸ்ரீ சண்டிகேஸ்வரர் , ஸ்ரீ சனி பகவான், ஸ்ரீ பைரவர் , நவகிரகம் , ஸ்ரீ நந்தி எம்பெருமாள் ஆகிய தனிகோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்க.சுந்தர் , வாலாஜாபாத் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், புளியம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை,காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட துணைசெயலாளரும் , புளியம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் சந்தானம், பிரபுராஜ், தவுலத்ராமன் , சுமன் ஜெகநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.