வாலாஜாபாத்தில் 1.5 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி

வாலாஜாபாத்தில் 1.5 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2021-07-29 09:15 GMT

பைல் படம்

கடந்த ஒரு மாதங்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் பறிமுதல் செய்தனர் . இதேபோல் பெங்களூருக்கு லாரியில் கடத்தி சென்ற 3.5 டன் அரிசி பறிமுதல் செய்து இரண்டு லாரிகள் பறிமுதல் செய்து மூன்று நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான குழுவினர் வாலாஜாபாத் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதி வழியாக வாகனத்தில் சென்ற ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் பாலூரை  சேர்ந்த சரவணன் என்பதும் அவரிடம் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இதில் அப்பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் அரிசியை விற்று வருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து அவர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இம்மாதத்தில் மூன்றாவது முறையாக வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்தல் பிடிபடுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News