சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
உத்திரமேரூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த வினோபா நகர் இருளர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் செல்வக்குமாருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவ்வகையில் அவ்வீட்டில் உள்ள 17 வயது சிறுமியை மயக்கி கர்ப்பமாகி உள்ளார்
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் உத்திரமேரூர் காவல்துறையினர் செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்