சுகாதார வளாகத்தை பள்ளிக்கு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
School News In Tamil- சுகாதார வளாகத்தை பள்ளிக்கு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.;
School News In Tamil- காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம் , மானம்பதி கிராம ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி . இங்கு மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு போதிய கழிவறை வசதி இல்லை குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதில் கிராம ஊராட்சிக்குட்பட்ட சுகாதார வளாகம் ஒன்று பள்ளிக்கு மிக அருகில் உள்ளது. அதனை சீர் செய்து பள்ளி பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2