வாலாஜாபாத்தில் 29 பேருக்கு வீட்டுமனைப் பட்டா; எம்எல்ஏ வழங்கல்

அயம்ஞ்சேரி கிராமத்தில் 29 ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை பட்டாவினை உத்திரமேரூர் எம்எல்ஏ., சுந்தர் வழங்கினார்.

Update: 2021-07-27 13:30 GMT

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் எம்எல்ஏ., சுந்தர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது அயிம்ஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த ஆதி திராவிட இன மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இம் மனுவினை வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இருபத்து ஒன்பது நபர்களுக்கு ஓப்புதல் பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில், இன்று நடைபெற்ற விழாவில் 29 நபர்களுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மேலும் நான்கு நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை ஆணையை வழங்கினர்.

இவ்விழாவில், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், வாலாஜாபாத் பேரூர் திமுக செயலாளர் பாண்டியன், வாலாஜாபாத் ஒன்றிய திமுக செயலாளர் பி. சேகர், வாலாஜாபாத் தாஸ் மற்றும் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News