விளையாட்டு பூங்கா சீரமைப்பு; சிறுவர்–சிறுமியர் உற்சாகம்

உத்திரமேரூர் நல்ல தண்ணீர் குளக்கரை விளையாட்டு பூங்காவில் உபகரணங்கள் மீண்டும் புணரமைக்கபட்டுள்ளதால் சிறுவர்–சிறுமியர் உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர்.;

Update: 2021-07-21 13:45 GMT

சீரமைக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீர் குளக்கரை சிறுவர் விளையாட்டு பூங்கா.

உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்டது நல்ல தண்ணீர் குளக்கரை. இக்குளக்கரையில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. இங்கு சறுக்கு மரம், ஊஞ்சல், சீசா உள்ளிட்ட சில விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி நிர்வாகம் பூங்காவில் சிறுவர்கள் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் பழுது பார்த்தல் மற்றும் புதிய உபகரணம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்து விளையாட்டு பூங்கா புதுப்பொலிவு பெற்றது.

இதையடுத்து பூங்கா மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. புதிய விளையாட்டு உபகரணங்ளில் சிறுவர்–சிறுமியர் உற்சாகத்துடன் விளையாடுகின்றனர்.

Tags:    

Similar News