ஹுண்டாய் நிறுவனம் சார்பில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் ஆலை
உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு ஹூண்டாய் மோட்டார் சார்பில் 50 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்ஸிஜன் ஆலை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு உலகமே அச்சுறுத்திய கொரோனா போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பல ஆயிரம் உயிர்களை இழக்கும் நிலை உருவானது.
இரண்டாம் அலையில் நோயாளிக்கு தேவையான ஆக்ஸிஜன் படுக்கைகளுக்காக உறவினர்கள் அலைந்த நிலையினை இனி வரும் காலங்களில் இதனை போக்கிட மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் களம் இறங்கியது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கா சிரமம்படுவதை தவிர்க ஆக்ஸிஜன் உற்பத்தியை உருவாக்க அரசு செயல்படுத்த நினைத்த நிலையில் அரசு மருத்துவமனையிலியே ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலை உருவாக்க அரசு , பண்ணாட்டு தொழிற்சாலை சமூக அறக்கட்டளைகள் விரைவாக அமைத்து பல உயிர்களை காப்பாற்றியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் 40லட்ச திட்ட மதிப்பிட்டில் 50 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் பிளான்டை ஹூண்டாய் மோட்டர் இந்தியா அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டது.
இன்று இதனை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் ஹீண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை அறங்காவலர் கணேஷ்மணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன்மூலம் இம்மருந்துவமனையில் 13 அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறங்காவலர் கணேஷ்மணி தெரிவிக்கையில் , தற்போது நிலவும் பேரிடர் சூழல் ஏற்படும் எத்தகைய விளைவை சந்திக்க தயாராக இருக்க வேண்டியதின் அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இதை அறக்கட்டளை சார்பாக செய்யப்பட்டுள்ளது.
மேலும் தண்டையார்பேட்டை மருத்துவமனை மற்றும் கடலூரில் அரசு மருத்துவமனையில் இத்திட்டம் விரைவில் செயல்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.