உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பு
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டது.;
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயல்பான மழை அளவை காட்டிலும் கூடுதலாக மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் மற்றும் நீர் நிலைகள் இன்றைக்கும் நிரம்பி காணப்படுகின்றது.
அவ்வகையில் நடப்பு பருவத்திற்காக சுமார் 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து இருந்தனர். அவை தற்போது விளைந்து நெற்கதிர் முற்றி அறுவடை காலம் துவங்கி உள்ளது. தற்போது நவரை அறுவடை துவங்கி உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் அறுவடை செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுவதுமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 21 இடங்களிலும் , வாலாஜாபாத் ஒன்றியத்தில் 34 இடத்திலும் , உத்திரமேரூர் ஒன்றியத்தில் 54 இடத்திலும் , ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 10 இடங்களிலும், குன்றத்தூரில் நான்கு இடங்களிலும் என மொத்தம் 123 கொள்முதல் நிலையங்கள் கடந்த சில தினங்களாகவே அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களால் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர் என இரு ஒன்றியங்களிலும் 88 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.
இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தனது தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டூர், மேல்பேரமல்லூர், மாகரல், காவண்தண்டலம் , கம்பராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
மேலும் விவசாயிகளின் நெல் பரிசோதனை, எடையளவு , ஆவணங்கள் உள்ளிட்டவைகளையும் சரி பார்த்து அனைத்து விவசாய நெல் மூட்டைகளையும், எந்த ஒரு முறை கேட்டுக்கும் வழி வகுக்காமல் அரசு விதிகளுக்கு உட்பட்டு கொள்முதல் செய்ய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குமணன், சாலவாக்கம் குமார், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் திவ்ய பிரியா இளமது , ஒன்றிய குழு உறுப்பினர் பரசுராமன் , கலை இலக்கிய அணி நிர்வாகி அசோகன் , ஊராட்சி மன்ற தலைவர் ராதாவிஜியகுமார், ராஜகோபால் , தட்சிணாமூர்த்தி , திருநாவுக்கரசு , ஓம்சக்தி வரதன், களக்காட்டூர் துணைத்தலைவர் பாலாஜி மற்றும் விவசாயிகள் கிராமப் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சரியான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வரும் சட்டமன்ற உறுப்பினரை விவசாயிகள் பாராட்டினார்கள்.