நூறுநாள் பணிக்கு தாமதமாக வந்த பெண்ணுக்கு செருப்படி அளித்த பணி தள பொறுப்பாளர்

மாகரல் கிராமம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு தாமதமாக வந்த பெண்ணை பணித்தள பொறுப்பாளர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு

Update: 2021-09-10 15:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்டது மாகரல் கிராம ஊராட்சி. கிராமத்தில் நீர் ஆதாரம் குறைந்ததால் விவசாயம் செய்ய முடியாமல், பொதுமக்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் சுமார் 1200 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து அவ்வப்போது வேலை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று  கிராம ஊராட்சியில்  மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிக்கு ஒரு பெண் தாமதமாக வந்துள்ளார். அப்போது பணித்தள பொறுப்பாளருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சற்றும் எதிர்பாராத நிலையில் பணித்தள பொறுப்பாளர் சுரேஷ் என்பவர் அப்பெண்ணை செருப்பால் அடித்துள்ளார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியுற்றனர். அருகில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

பணிக்கு தாமதமாக வந்ததற்கு சம்பளத்தை குறைத்து அளித்திருக்கலாம் அல்லது எச்சரிக்கை செய்திருக்கலாம், இதை தவிர்த்து இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பணித்தள பொறுப்பாளரை பணியில் இருந்து விடுவிக்க பணியாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News