அதிமுக வேட்பாளர்களிடையே போட்டி: இரட்டை இலை சின்னம் "அம்பேல் "

வாலாஜாபாத் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களில் ஒருவர் வாபஸ் பெறாததால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் சுயச்சை சின்னம் கிடைத்தது;

Update: 2022-02-07 13:15 GMT

வாலாஜாபாத் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் அடங்கியுள்ளது. இதில் 54 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

இன்று வாபஸ் பெற்ற நிலையில் கட்சிகளுக்கான ஒதுக்கீடு நடைபெற்றபோது அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் மற்றும்  மாபுப்பாஷா ஆகிய இருவரும் தாக்கல் செய்திருந்த நிலையில் இருவரும் வாபஸ் பெற மறுத்ததால் இருவருக்கும் தேர்தல் ஆணைய விதிகள்படி சின்னங்கள் ஒதுக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

போட்டி காரணமாக இருவரும் முரண்டு பிடித்ததால் வாலாஜாபாத் 15வது வார்டில் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக உதயசூரியன் மட்டுமே போட்டியிடுகிறது. போட்டி காரணமாக 15 வார்டில் இரட்டை இலை சின்னம் அம்பேலானது.

Tags:    

Similar News