வாலாஜாபாத் தனியார் பள்ளி சார்பில் தேசிய வன மகோற்சவம் கொண்டாட்டம்

வாலாஜாபாத் தனியார் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சூழல் கிளப் சார்பில் அரசு அலுவலகங்களில் மரம் நடும் விழா நடைபெற்றது.;

Update: 2022-07-07 08:30 GMT

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 

தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சூழல் கிளப் மாணவ மாணவியர்கள்  வாலாஜாபாத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை, அரசு மருத்துவ மனை, இரயில் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் நிழல் தரும் மரக் கன்றுகள் நட்டனர்.

இவ்விழாவில் ஒன்றியகுழுத் தலைவர் ஆர். கே. தேவேந்திரன், துணை தலைவர் ப. சேகர், வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜ்குமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வையாவூர் உலகநாதன், அளவூர் நாகராஜ், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, துணைத் தலைவர் ஏவி சுரேஷ், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மரு விமலா, மரு இராஜேந்திரபிரசாத், சித்த மருத்துவர் கலைவாணி வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News