மணப்பாறையில் காணாமல் போன நெல் அறுவடை எந்திரம் காஞ்சீபுரத்தில் மீட்பு..

மணப்பாறையில் திருடப்பட்ட நெல் அறுவடை எந்திரம் காஞ்சீபுரத்தில் மீட்கப்பட்டது;

Update: 2021-09-07 09:30 GMT

மீட்கப்பட்ட நெல் அறுவடை எந்திரம்

பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர்வெங்கடேசன்.  கடந்த 14ஆம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் தனது நெல் அறுவடை எந்திரத்தை நிறுத்தி வைத்துவிட்டு சென்ற நிலையில் அதை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதுபற்றி வெங்கடேசன் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார்.

நெல் அறுவடை எந்திரம் திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் வெங்கடேசனின்  கிராமத்திற்கு அருகிலுள்ள அரும்பாவூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை காவல் துறை விசாரித்தபோது காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத் தாங்கி பகுதியில் தனது உறவினர் வீட்டில் நெல் அறுவடை எந்திரத்தை மறைத்து  வைத்து உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து தனிப் படை போலீசார்  காஞ்சீபுரம் தாங்கி கிராமத்திற்கு வந்து நெல் அறுவடை எந்திரத்தை மீட்டு பெரம்பலூர்  எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக ரவியை கைது செய்துள்ளனர்.


Tags:    

Similar News