மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்

Minister Anbarasan warns those who do not wear masks

Update: 2022-06-25 16:30 GMT

வாலாஜாபாத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் விழாவில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ. அன்பரசன்,  திமுக அரசு பொறுப்பேற்றபோது பெரும் சவாலாக இருந்த நிலையில் தமிழக முதல்வர் உட்பட அரசு அதிகாரிகள் பொது மக்கள் ஒத்துழைப்புடன் பரவல் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்தது.

இந்நிலையில் தற்போது உருமாறிய குரான வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,  விழாவிற்கு வந்த 50 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிந்துள்ளனர்,  மற்றவர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதாகவும் இதை தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.இதைக்கண்ட முகக்கவசம் அணியாத நபர்கள் மேடையின் இருபுறமும் இருந்து உடனடியாக விலகிச் சென்றனர்.



Tags:    

Similar News