மாகரல் : தடுப்பனையில் போதிய பாதுகாப்பு இல்லாததால் ஆபத்துடன் விளையாடும் சிறுவர்கள்

காஞ்சிபுரம் அடுத்த மாகரல் தடுப்பணையில் போதிய பாதுகாப்பு இல்லாததால் ஆபத்துடன் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.;

Update: 2021-10-17 10:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராம அருகே செய்யாறு செல்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 8கோடி மதீப்பீட்டில்  இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டது.

இது நிறைவுற்று இதுவரை இருமுறை தடுப்பணநிரம்பி வழிந்து அருகிலுள்ள ஏரிகளுக்கும் ,அப்பகுதியில் இயங்கும் உத்திரமேரூர், மதுராந்தகம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நீர் ஆதாரம் பெருகி தங்குதடையின்றி 24மணி நேரமும்  குடிநீர் வழங்கப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்  விவசாயம் தடையின்றி நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்போது  நிரம்பிய நிலையில் விடுமுறை காலம் என்பதால் கிராம மக்கள் தங்கள் விருந்தினர்களை அழைத்து கொண்டு நீராட வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவர்கள் தடுப்பணை அலுவலகம் அருகே சுற்று சுவர் வழியாக கதவு திறவுக்கோல் அருகே சென்று ஆபத்தாக விளையாடி வருகின்றனர். அலுவலக ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தும் அலட்சியாமாகவே பயணிக்கின்றனர்.ஆகவே அப்பகுதியில் தடுப்பு அமைத்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News