ஸ்ரீகளரொளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
உத்தரமேரூர் அருகே பெருநகரில் அமைந்துள்ள களரொளியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீர் தெளித்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே பெருநகரில் அமைந்துள்ள களரொளியம்மன் கோயில்.இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை நிறுவப்பட்டு 5கால பூஜைகள் கணபதி பூஜையுடன் தொடங்கின. இன்று காலை பூஜைகள் நிறைவுற்று யாகசாலையிலிருந்து புனிதநீர்க்குடங்கள் புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதனையடுத்து மூலவர் களரொளியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.
கும்பாபிஷேக விழாவில் கே.கண்ணுதல் மூர்த்தி சுவாமிகள்,காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம்,உத்தரமேரூர் சட்டப் பேரவை உறுப்பினர் க.சுந்தர்,புதுச்சேரி மாநில வருவாய்த்துறை அமைச்சர் லெட்சுமிநாராயணன், என பலரும் கலந்து கொண்டனர்.
கீழ்நெல்லி சக்தி நாடக மன்றத்தினரின் நாடகமும் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை பெருநகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.