மருந்தடிக்கும் இயந்திரம் மூலம் வர்ணம் அடிக்கும் உள்ளூர் விஞ்ஞானிகள்

விவசாயப் பணிக்கு உபயோகப்படுத்தும் இயந்திரத்தை சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிக்கு பயன்படுத்துகின்றனர்;

Update: 2022-06-11 14:15 GMT

ஆற்பாக்கம் ஏரி கரையில் மருந்தடிக்கும் ஸ்பிரேயர் மூலம்  நடைபெற்று வரும் வர்ணம் தீட்டும்  பணி.

ஊரக வளர்ச்சி திட்ட முகமை சார்பில் நீர்நிலைகளின் கரைகள் சேதம் அடைவதை தவிர்க்க கருங்கற்களால் கரை கட்டமைத்து  பலப்படுத்தும் கட்டுமான பணிகள் பல்வேறு கிராம ஊராட்சிகளில் நடைபெறுகிறது.

இதனை கட்டி முடித்தபின் அதனை வண்ணம் தீட்டும் பணி நடைபெறும். நீண்ட ஏரி கரை சுவர்களை வண்ணம் தீட்ட பல மணி நேரம் எடுக்கும் ‌என்பதாலும், ஆட்கள் கூலி மிச்சம் செய்யும் வகையில் புதிய முறையை உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் (விஞ்ஞானிகள்) கண்டுபிடித்துள்ளனர்

விவசாயிகள் தங்கள் நிலங்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுபடுத்த பவர் ஸ்பிரையர் எனும் இயந்திரம் மூலம் பூச்சி மருந்துகளை கொண்டு தெளிப்பர். இந்த இயந்திரத்தை பயன்படுத்தி தற்போது கட்டுமான ஒப்பந்ததாரர்கள் குறைந்த நேரத்தில் பல தூரங்கள் கொண்ட தடுப்பு சுவர்களை சுண்ணாம்பு கரைசலை கொண்டு ஸ்பிரே செய்து வர்ணம் தீட்டி வருகின்றனர். இயந்திரத்தை பலவகைகளில் பயன்படுத்தலாம் என கூறி இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News