காஞ்சிபுரம் - உத்திரமேரூர் நெடுஞ்சாலைகளில் வாகன பார்வை குறைபாடு உள்ள பகுதிகளில் விபத்தை குறைக்க சாலை விரிவாக்கம்

காஞ்சிபுரம் உத்திரமேரூர் மாநில சாலையில் பார்வை குறைபாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து விபத்துகளை குறைக்கும் நோக்கில் அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலை துறை செய்ய துவக்கியுள்ளது.

Update: 2021-07-04 09:15 GMT

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் நெடுஞ்சாலை பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் - உத்தரமேரூர் கீழ் ரோடு சாலை  சென்னை-  திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் உள்ளது. 

இச்சாலையில் பயணிக்கும் நிலையில் கால நேரம் மற்றும் வாகனங்களை உதாரணமாக வேலூர் , அரக்கோணம் அருகில் இருந்து வரும் பயணிகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதுமட்டு மல்லாமல் கர்நாடக மாநில பக்தர்கள் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு செல்ல  வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையை பயண்படுத்துகிறது .

இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து  உத்திரமேரூர் செல்லும் போது  நான்கு இடங்களில் அதிக அளவில் பார்வை குறைபாடு உள்ளதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடை பெறுகிறது.

இதனை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறை அப்பகுதிகளில் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன் துவக்கி தற்போது பணிகளைத் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுபோன்று பல்வேறு வாகன பார்வை குறைபாடு உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு விபத்துகளை குறைத்து பாதுகாப்பான சாலையாக உருவாக்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News