காஞ்சிபுரம்: தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு பூஜை வழிபாடு

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.;

Update: 2021-07-31 14:45 GMT

 ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள உற்சவ பைரவர் 


திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் மலர் அலங்காரத்தில் பைரவர்

பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமியான இன்றுபைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள். இன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் உற்வருக்கு சந்தனம் , இளநீர், பழவகைகள், பால், தயிர் மற்றும் அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைற்றது.

இதேபோல் ஆர்பாக்கம் திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ள பைரவருக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News