காஞ்சிபுரம்: அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க தயார் நிலையில் மளிகை பொருட்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 14 வகையான மளிகை பொருட்கள் அனைத்தும் நியாயவிலைக் கடைகளிலும் தயார் நிலையில் உள்ளன.;

Update: 2021-06-13 10:55 GMT

காஞ்சிபுரத்தில் அரிசி ரேஷன் கார்டுகளுக்கு வழங்க தயாராக உள்ள 14 வகை மளிகை பொருட்கள்.

தமிழகத்தின் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என பல கட்டங்களில் அமல்படுத்தபட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையை போக்க தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.2000 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டாயிரம் அதனுடன் சர்க்கரை, கோதுமை மாவு , ரவை, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு , உப்பு , டீ தூள் , கடுகு , சீரகம் , மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் என 14 வகையான மளிகைப் பொருட்களும் அடங்கிய தொகுப்பு பைகள்  கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வருகிற 15ம் தேதி முதல் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க அதற்கான டோக்கன்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடுகள்தோறும் சென்று அளித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரன மளிகை பொருட்கள் அனைத்தும் அந்தந்த நியாயவிலை கடைகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாளொன்றுக்கு 200 நபர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு அது குறித்த தகவல்கள் அந்த டோ கண்களில் இடம்பெற்றுள்ளது.

மேலும் பொருட்கள் வழங்கப்படும் பைகளில் அரசு முத்திரை மற்றும் நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம் தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம் எனும் வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News