காஞ்சி: 13 வகையான மளிகைபொருள் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தீவிரம்!
கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை பெருவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.;
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கையை நகர்த்த பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.4௦௦௦, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த வாரம் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது.
நோய்ப் பரவல் கட்டுப்படுத்த தளர்வுகள் அற்ற ஊரடங்கு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதால் மளிகை பொருட்களை பெற பொதுமக்கள் திண்டாடும் நிலையில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 13 வகையான மளிகைப் பொருட்கள் நாளை முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
அதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு பணிகள் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நாளொன்றுக்கு 200 பேருக்கு வழங்கும் நோக்கில் இதற்கான டோக்கன்களை நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். நான்காம் தேதி வரை இப்பணிகள் நடைபெற்ற பின் பொருட்கள் குறிப்பிட்ட நாள் அன்று அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.