17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடக்க முயன்ற வாலிபரை காஞ்சி தாலுகா காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்,நெய்யாடுபாக்கம் கிராமம் , வன்னியர்தெரு பகுதியை சேர்ந்த சித்திரை செல்வன்.
இவர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடக்க முயன்றதாக சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சித்திரைச் செல்வனை கைது செய்து விசாரித்ததில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற ஒப்புக்கொண்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி விடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.