காஞ்சிபுரம் அருகே செய்யாறு தடுப்பணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிப்பு
Cheyyar River - காஞ்சிபுரம் அருகே பலத்த மழையால் செய்யாறு தடுப்பணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.;
Cheyyar River -காஞ்சிபுரம் - உத்திரமேரூர் கீழ்ரோடு சாலையில் மாகரல் வெங்கச்சேரி இடையில் செய்யாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பணை கட்டப்பட்டது.கடந்த ஒரு மாத காலமாகவே பருவநிலை மாற்றம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது லேசான முதல் கன மழை பெய்து வருகிறது.
தற்போது மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்த நிலையில் தற்போது செய்யாற்றில் அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை நிரம்பி வழிந்து வருகிறது.
தற்போது இப்பகுதியில் கடந்த பருமமழையின் போது சேதமடைந்த தரைப்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிவதால் செய்யாற்று பகுதி விவசாயிகள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான நீர் ஆதாரம் பெருகும் என்பதால் அனைத்து தரப்பினரும் மீண்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2