இளையனார்வேலூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் இலட்சார்ச்சனை பெருவிழா
காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இலட்சார்ச்சனை திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், இளையனார்வேலூர் கிராமத்தில் செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இங்கு வருடந்தோறும் மாசி மாதம் மூலவர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 7 நாட்கள் சிறப்பு இலட்சார்ச்சனை பெருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மற்றும் தை கிருத்திகை அடுத்த இந்த. மூன்று வேளைகளில் நடைபெறும் இலட்சார்ச்சனை விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் பெயரை ரூ100 செலுத்தி பதிவு செய்து சங்கல்பம், அர்ச்சனை செய்து கொள்வது வழக்கம்.
அவ்வகையில் கடந்த 3ம் தேதி துவங்கிய இவ்விழா வரும் 8ம் தேதி வரை 3 காலங்களில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு இலட்சம் வேதமந்திரம் சிவாச்சாரியார்களால் சொல்லபட்டு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளாமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.
அதன் பின் உற்சவர் பால்சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனை செய்யபட்டு கலந்துகொண்ட அனைவருக்கும் கோயில் அர்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு மற்றும் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் வழிகாட்டுதல்படி கோயில் செயல் அலுவலர் ஜெ.இளங்கோவன், ரவி குருக்கள் திருக்கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை அனைத்து வசதிகளும் செய்யபட்டது.