வழிப்பறி மற்றும் கள்ளக்களவு வழக்கில் ஓருவர் கைது - 9 சவரன் நகை பறிமுதல்

கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த‌ தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினர்

Update: 2021-07-17 14:30 GMT

 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கள்ளக்களவு , வழிப்பறி ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகரன் உத்தரவின் பேரில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு களியாம்பூண்டி கிராமத்தில் அதிமுக ஒன்றியச் செயலர்கள் வீட்டில் புகுந்து மர்ம நபர் அவரது மனைவி கழுத்தில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனை மற்றும் சந்தேகத்தின் பெயரில் சிலரை அழைத்து விசாரித்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பது மூன்று பகுதிகளில்  திருட்டில் ஈடுபட்டு வந்ததும்  தெரியவந்தது. இவரிடம் இருந்து சுமார் 3.5 லட்சம் மதிப்பிலான உனக்குத் 20 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உட்படுத்தப்பட்டார்.

கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த‌ தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினர்

Tags:    

Similar News