பள்ளிகளில் நல்ல சூழலே சிறந்த மாணவர்களை உருவாக்கும்: எம்எல்ஏ சுந்தர்

சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 12 பள்ளிகளுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.;

Update: 2021-10-22 02:55 GMT

பள்ளி கட்டடங்களை திறந்துவைக்கும் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் அடுத்துள்ளது சாலவாக்கம் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப பள்ளி, அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 பள்ளிகளில் பழைய கட்டடங்கள் ரூ 2.5 கோடியில் புதுப்பிக்கப் பட்டன. சில பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் ஹண்டாய் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டன.

இந்த கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடந்தது. உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமை தாங்கி கட்டடங்களை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

விழாவில் எம்.எல்.ஏ., சுந்தர் பேசும்போது, 'மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால், பள்ளிகளில் நல்ல வகுப்பறைகள் இருக்க வேண்டும். நானும் இந்தப் பள்ளியில் தான் படித்தேன். அப்போது கல்வியில் முதல் மாணவனாக இருந்தேன். படிக்கும் போதே நன்கு படித்தால் உயர் பதவிகளை அடையலாம். இந்த பள்ளியில் நிறைய விளையாட்டு மாணவர்கள் உருவாகியுள்ளனர்.

மாணவர்கள் படிப்புடன் விளையாட்டு திறணையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்' இவ்வாறு எம்.எல்.ஏ., சுந்தர் பேசினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், ஹீண்டாய் நிறுவனத்தின் அறங்காவலர்களான கணேஷ்மணி, ஸ்டீபன்சுதாகர்,  பள்ளி தலைமை ஆசிரியர்களான ஜெயரூபினி, ராதா, பழைய மாணவன் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

Tags:    

Similar News