உத்திரமேரூர் : ஏரி நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி தற்போது நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால் 18 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூரில் 18 மதகுகளுடன் , 5500 ஏக்கர் ஏக்கர் பாசன பரப்பளவும், 958 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
இந்த ஏரியை நம்பி 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில் 20 அடி முழுமையாக தற்போது நிரம்பி உபரிநீர் மாலை முதல் கலங்கள் வழியாக வெளியேறி வருகிறது.
கடந்த வாரம் பெருநகர் செய்யாற்றில் வந்த நீரை அனுமந்தண்டலம் பகுதியில் பொதுப்பணித்துறையினர் நீரைத் திருப்பி உத்திரமேரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வழி வகை செய்தனர்.
இதனால் உத்திரமேரூர் ஏரி மெல்ல மெல்ல நிரம்பத் துவங்கி இன்று காலை முதலில் மழை பெய்து வருவதால் விரைவாக நிறைவு பெற்று உபரிநீர் தற்போது வெளியேறுகிறது. உத்திரமேரூர் ஏரி நிரம்பி வழிவதால் 18 கிராம விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.