துணைத்தலைவர் தேர்தல் நடத்திய தேர்தல் அலுவலர் மாரடைப்பால் மரணம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சியில் இன்று துணைத் தலைவர் தேர்தலை நடத்திய தேர்தல் அலுவலர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Update: 2021-10-22 08:45 GMT

மாரடைப்பால் மரணமடைந்த தேர்தல் அலுவலர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வயதுக்குட்பட்ட தாங்கி ஊராட்சியில் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 6 வார்டு உறுப்பினர்கள் ஒரு அறையில் ரகசிய வாக்கெடுப்பு  நடைபெற்றது.

 தலைவர் தேர்தலில் நின்ற அதிமுகவை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தோல்வியுற்றதால் துணை தலைவருக்காக அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு வாக்களிக்குமாறு ரகசிய அறையின் ஜன்னல் பகுதியில் இருந்து குரல் கொடுக்கவே அவற்றை தேர்தலில் அலுவலரான ஹரி கிருஷ்ணன் தட்டிக்கேட்டார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஹரி கிருஷ்ணனுக்கு பிபி அதிகமாகியது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றன.பின்னர் அவர் மருத்துவ சிகிச்சைக்காக காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட போது வழியிலேயே உயிர் பிரிந்தது

இவை முழுக்க முழுக்க ரகசிய வாக்கெடுப்பின்போது அதிமுகவை சேர்ந்த ஒருவரால் ஏற்பட்ட வாக்குவாதம். தேர்தல் அலுவலரின் மன உளைச்சலுக்கு காரணமாக அமைந்ததால் உயிர் பிரிந்ததாக அங்கு கூடி உள்ள பொதுமக்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் மன உளைச்சலாலும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தகுந்த ஓய்வை வழங்கியும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து இருந்தால் இதுபோன்ற சோகம் ஏற்பட்டு இருக்காது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News