ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.2.93 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-19 10:45 GMT

காஞ்சிபுரம் அருகே ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.2.93 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் வாலாஜாபாத்தை அடுத்த திருமுக்கூடல் பகுதியில் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மோட்டார்பைக்கில் அவ்வழியே வந்த நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்து அதன்பின் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News