மேள தாள முழங்க பூ தூவி வேட்பாளரை வரவேற்ற திமுகவினர்

பிரச்சாரத்திற்கு வந்த உத்திரமேரூர் சட்டமன்ற திமுக வேட்பாளரை மேள தாள முழங்க மலர் தூவி வரவேற்றனர்.;

Update: 2021-03-30 15:55 GMT

தமிழகத்தில் வாக்குபதிவு நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக உள்ளனர்.

கடும் கோடை வெய்யில் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 6 மணி முதலே தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வேட்பாளர்கள் தனது கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் ஏரிக்கரை பேராசிரியர் நகர் பகுதியில் வாக்கு சேகரிக்க வரும் போது அவரை வரவேற்க வெடிகள் வெடித்து, மேள தாள மங்கள ‌இசை முழங்க மலர்தூவி வேட்பாளரை வரவேற்றனர்.

Tags:    

Similar News