நியாயவிலை கடைகளில் அரிசி தரம் இல்லை : நெல் அரவை நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

அரசு ஆலையிலிருந்து நியாயவிலை கடைக்கு அனுப்பும் அரிசி தரம் இல்லை என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் சென்றுள்ளது;

Update: 2021-08-17 10:30 GMT
நியாயவிலை கடைகளில் அரிசி தரம் இல்லை :  நெல் அரவை நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

உத்திரமேரூர் அருகே வேடபாளையத்தில் உள்ள அரசு அரிசி அரவை ஆலையில் ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்ஆர்த்தி 

  • whatsapp icon

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 3.60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடிமை பொருள் மற்றும் வட்ட வழங்கல் துறை சார்பில்  நியாயவிலை கடைகளின் மூலம் மாதந்தோறும் குறைந்தபட்சம் 20    கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இதற்காக அரசு நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் நெல் அரவை ஆலைகளில் தயாரான பின் நியாய விலை கடைகளுக்கு செல்கிறது. கடந்த சில மாதங்களாக நியாய விலை கடைகளுக்கு செல்லும் அரிசி தரமானதாக இல்லை என புகார் எழுந்துள்ளது.  உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் உள்ள அரசு ஆலையிலிருந்து நியாயவிலை கடைகளுக்கு செல்லும் அரிசி தரம் இல்லை என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கே  அப்பகுதி அட்டைதாரர் புகார் அளித்தார். அதன்பேரிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று அரசு அரிசி அரவை ஆலையில்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் முதல் தர அரிசி தயாரிப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று எடை , இருப்பு நிலை ஆகிய பகுதிகளை காண்பித்தனர். ஆனால், ஆலையின் பின்பகுதியில் இயங்கும் மற்றொரு  இடத்தினை காண்பிக்கவில்லை. இந்த இடத்திலிருந்து செல்லும் அரிசிகள் தான் தரமில்லை என கூறப்படுகிறது.

Tags:    

Similar News