ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் எடுத்த ஆட்சியர்
நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றபோது அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஆசிரியர் மற்றம் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை சார்பில் இரண்டாம் தவணைக் கோமாரி தடுப்பூசி முகாம் துவக்க விழா காஞ்சிபுரம் அடுத்த பெரியநத்தம் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாமினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கால்நடை வளர்ப்போருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்பின் அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி வகுப்பறையில் உள்ள மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ஆங்கில வகுப்புகள் நடத்தி கொண்டிருந்த ஆசிரியரிடம் சில விளக்கங்களை கேட்டு அறிந்து பாடம் குறித்து அங்குள்ள மாணவர்களிடம் விளக்கம் கேட்டபோது மாணவர்கள் தெரியாது நின்றனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவர்களுக்கு ஆங்கில இலக்கணம் வகுப்புகளை எளிய முறையில் விளக்கிக் கூறி ஆசிரியரிடம் இனி மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடங்களை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பின் அப்பள்ளியின் அறிவியல் ஆய்வகம் எங்கு உள்ளது என கேட்டு அதைப் பார்வையிட சென்றபோது அக்கட்டிடத்தை ஊழியர்கள் திறந்தபின் உள்ளே சென்று பார்த்தபோது ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.
அறிவியல் ஆய்வகத்தில் எந்த ஒரு உபகரணம் இல்லாமல் அப்பகுதி குடோன் போல காட்சி அதைக்கண்டு அறிவியல் ஆசிரியரை அழைத்து கேட்டபோது முன்னுக்குப் பின்னான பதில்களை அளித்தார். திருப்தி அடையாத ஆட்சியர் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோதும் அவரும் திருதிருவென முழித்தார்.
அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் இல்லாதது மாவட்ட ஆட்சியர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் தொடர்ச்சியாக முதன்மை கல்வி அலுவலராக தொடர்பு கொள்ளவும் ஒரு மாதத்திற்குள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என எச்சரித்து சென்றார்.