காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ரேசன் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
வாலாஜாபாத் வட்டத்தில் பல்வேறு நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நியாய விலைக் கடையில் விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டு அவற்றின் தரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நியாய விலைக் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை தரமானதாகவும், சரியான அளவிலும் விநியோகிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நியாய விலைக்கடைக்கு வந்திருந்த பொது மக்களிடம் விநியோகிக்கப்படும் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்ட வழங்கல் அலுவலர் திரு.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.