உத்தரமேரூரில் செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்

Chess Olympiad 2022- உத்திரமேரூர் பஸ் நிலையத்திலிருந்து அரசு கலைக்கல்லூரி வரை செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடந்தது.

Update: 2022-07-21 06:00 GMT

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் செஸ் விழிப்புணர்வு போட்டியினை  சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் துவக்கி வைத்தார். சசிகுமார் , ஒன்றிய செயலாளர் ஞானசேகரன்

Chess Olympiad 2022- சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக  நடத்தப்படுகிறது. இப்போட்டி வரும் 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் சட்டைகள் அணிந்து மாரத்தான் போட்டி நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்தார்.உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய மாராத்தான் போட்டி திருப்புலிவனம் கலை கல்லூரியில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன்,பேரூராட்சி தலைவர் சசிகுமார், பேரூர் செயலாளர் பாரிவள்ளல் ,ஆசிரியர்கள்,கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News