77 சதவீத வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்கள்: ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான 88 வாக்கு சாவடிகளில் வெப் ஸ்டிரீமிங் முறையில் கண்காணிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடைபெற தமிழக மாநில தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஐம்பத்தொரு வார்டுகளும், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகளும், மாநகராட்சியில் இருபத்தி ஏழு வார்டுகளும் , வாலாஜாபாத் மற்றும் திருப்பெரும்புதூர் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சி 18 வார்டுகள் என மொத்தம் 156 வார்டுகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
வாக்கு பதிவிற்கு ஏதுவாக மொத்தம் 384 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது இதில் 88 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதட்டமான வாக்குப்பதிவு மையங்களில் அனைத்திலும் வெப் ஸ்டீரிமிங் முறையில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
இதுமட்டுமில்லாமல் மாவட்டத்திலுள்ள 296 வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கால் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு அன்று அமைதியான முறையில் நடைபெற கண்காணிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.