எம்.எல்.ஏ சம்பளத்தை கிராம நல திட்டங்களுங்கு வழங்குவேன் அமமுக வேட்பாளர் வாக்குறுதி
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினராக தான் தேர்வு செய்யப்பட்டால் தனக்கு வழங்கப்படும் சம்பளத்தை கிராம நல திட்டங்களுக்கு செலவிடுவேன் என வாக்குறுதி அளித்து கிராமங்களில் வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்..
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டுபவர் ஆர்.வி. ரஞ்சித்குமார். இவர் நேற்று உத்தரமேரூர் அடுத்த களியாம்பூண்டி , கடல்மங்கலம் , மருதம் , அழிசூர் , திருப்புலிவனம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
இவர் தனது பரப்புரையில் தான் ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் முதல்முறையாக சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடுவதாகவும் தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் அரசு தரும் சம்பளத்தை கிராம நல திட்டங்களுக்கு செலவிடுவேன் என உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன் அனைவரும் தவறாது குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.