திமுக நிர்வாகியை கொன்றது ஏன், கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்கு மூலம்
வாலாஜாபாத் அடுத்த மதூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சண்முகத்தை கொலை செய்தது, ஏன் என்று கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் கடந்த 30 ஆம் தேதி இரவு ஒன்பது மணி அளவில் வாலாஜாபாத்தில் இருந்து மதூர் செல்லும் போது மர்ம நபர்களால் தலையில் காயப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சாலவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட இரும்பு பைப் மற்றும் பல்சர் வாகனத்தை தடையங்களாக கொண்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் மதூர் கிராமத்தை சேர்ந்த சிலரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டபோது ஓப்பந்தபணி தொழில் போட்டி காரணமாக இருக்கலாம் என கூறியதை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு தன்னுடன் அவரது மகன் நித்தியானந்தம் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த இந்துசேகர், கண்ணன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் இணைந்து அவரை கொலை செய்ததை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த காவல்துறையினர் மற்றும் தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினார்.