எம்.எல்.ஏ சீட் இல்லை : 5வது முறை கட்சி மாறிய அதிமுக பிரமுகர்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் 5வது முறையாக கட்சி மாறிய MGR இளைஞரணி செயலாளர்.;

Update: 2021-03-11 05:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளராக பதவி வகித்த முத்தியால்பேட்டையை சேர்ந்தவர்  ரஞ்சித்குமார்.

இவர் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் இருந்து தீபா அணிக்கு சென்று பணியாற்றி வந்தார். அதில் சரிவர மரியாதை இல்லை எனக் கூறி மீண்டும் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் அதிமுக இரு தலைவர்கள் இணைப்பிற்கு பின் ஓபிஎஸ்-ன்  தீவிர விசுவாசியாக பணியாற்றி அதிமுக கொண்டாடிய விழாக்களில்  பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் உத்திரமேரூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மனு அளித்திருந்தார். நேற்று பட்டியல் வெளியானபோது, அதில்  காஞ்சிபுரம் தொகுதி பாமகவுக்கும், உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுகவுக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர்  சோமசுந்தரம் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். 

Tags:    

Similar News