வாலாஜாபாத் சிலிண்டர் விபத்து பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகள் விசாரணை
ADMK Latest News in Tamil -வாலாஜாபாத் சிலிண்டர் விபத்து பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகள் விசாரணை நடத்தினர்.;
ADMK Latest News in Tamil -காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தேவரியபாக்கம் பகுதியில் தனியார் சிலிண்டர் குடோன் செயல்பட்டு வந்தது. இதில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டு ஆறு ஆண்கள் 5 பெண்கள் ஒரு சிறுவர் என மொத்தம் 12 பேர் காயங்களுடன் செங்கல்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர தீப்புண் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிலிண்டர் விபத்து ஏற்பட்ட தேவரியம்பாக்கம் பகுதியினை காஞ்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக அமைப்பு செயலருமான வாலாஜாபாத் கணேசன் அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து அப்பகுதியை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து நபர்களின் ஒரே அவர்களிடம் ஆறுதல் கூறி சிகிச்சை முறைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.இந்நிகழ்வில் அக்ரி நாகராஜன் , பழனி , மோகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2