சுற்றுச்சூழல் பாதிப்பு-லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

Update: 2021-03-11 05:45 GMT

கனரக லாரிகளால் விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக காஞ்சிபுரத்தை அடுத்த காவந்தண்டலம் கிராம பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட கல் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கருங்கல் ஜல்லி , எம்சாண்ட் ஏற்றி செல்ல காவாந்தண்டலம் வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகள் நாள்தோறும் 24 மணி நேரமும் பயணிப்பதால் தொழிற்சாலை பணியாளர்கள் , விவசாயிகள் என பலர் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கனரக லாரி போக்குவரத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் , சுவாச கோளாறு வருவதாக கூறி காவாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News