உத்திரமேரூர் பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் மன்னர் காலத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த பதிவுகளை தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுவதாகவும் , தற்போதைய அரசியலுக்கு ஒவ்வாது என்பதால் இப்பதிவுகளை அரசியல் கட்சியினர் பேச தயங்குவதாக சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு கல்வெட்டு ஊர் என்றே பெயர் உண்டு. இப்பகுதியில் பண்டைய வரலாறு சார்ந்த கல்வெட்டுகளும் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்று எச்சங்களும் அநேகம் அங்கு உள்ளன. அங்கு ஊருக்கு நடுவே அமைந்திருக்கும் வைகுண்டப்பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் அந்தக் கால தேர்தல் நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்த செய்திகள் தெளிவாக காணப்படுகின்றன.
பிரதமர் மோடி இக்கல்வெட்டு குறித்து பேசினார். கல்வெட்டில் உள்ள தேர்தல் விதிமுறைகளை ஒருமுறையாவது அல்லது பகுதியாவது ஒவ்வொரு தேர்தலிலும் நடைமுறைக்கு கொண்டு வரலாம் என அரசியல் கட்சிகள் பேசியது உண்டா?இதன் பதிவுகள் ஒன்று கூட தற்போதைய நடைமுறையில் ஒவ்வாது என சொல்லி கொண்டே தேர்தல் நேரத்தில் மட்டுமே உத்திரமேரூர் எனும் ஊர் ஞாபகம் வைத்து பேசுவதாகவும் , சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.