சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவர் மாயம்
சென்னையில் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.;
ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் தெப்பக்குளத்தில் விழுந்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(45). இவர் தனது உறவினர் இல்ல காதுகுத்து நிகழ்ச்சிக்கு வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்வதற்காக அருகில் உள்ள தெப்பகுளத்தில் நீராட சென்றுள்ளார். அப்போது தவறி குளத்தில் விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு அலுவலர் ஜெகதீசன் குழுவினர் படகு கொண்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.