மனைவியின் கள்ளக்காதலனை நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய கணவன், 7 பேர் கைது
படப்பை அருகே மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபரை கண்டித்தும் அத்துமீறியதால், நண்பர்கள் உதவியுடன் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்து செய்தனர்.;
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் அடுத்த படப்பை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு.தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு தனது மனைவி ரேணுகா மற்றும் இருகுழந்தைகள் உடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி ரேணுகா மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் மணிமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வஞ்சுவாஞ்சேரி சேர்ந்த தேவராஜ் என்பவர் அவரிடம் வந்து தனது மகன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என பேசிக் கொள்வது எனக்கு சந்தேகம் அளிப்பதாக வந்து விசாரணை மேற்கொள்ள தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் அவரது வீட்டுக்கு சென்று அவர் எனது மகனை விசாரித்தபோது படப்பை சேர்ந்த ராமு என்பவரை 3ஆம் தேதி வஞ்சுவாஞ்சேரி குட்டைப் பகுதியில் அவரை நண்பர்கள் உதவியுடன் கொலை செய்து விட்டு கல்லைக்கட்டி குட்டையில் போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நடைபெற்ற விசாரணையில் ராமு நரியம்பக்கம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் மனைவியிடம் கள்ள உறவு வைத்திருந்ததாகவும் பலமுறை எடுத்துக் கூறியும் கேட்காததால் மணியுடன் சேர்ந்து இச்செயலைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து மகாலட்சுமியின் கணவரின் மணி, தினேஷ், வினோத், பிரபாகரன் , பூவேந்திரன் , ஆகாஷ் , சின்னராசு ஆகிய 7 பேரை காவல்துறை கைது செய்து குட்டையிலிருந்து ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.