பாதுகாப்பான சாலை விதிகள் வீடியோவுடன் கற்பித்து அசத்திய தனியார் தொழிற்சாலை

பள்ளி குழந்கைளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை யமஹா நிறுவனம் நடத்தியது.

Update: 2021-12-11 03:00 GMT

சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது யமஹா நிறுவனம்.

"சாலை பாதுகாப்பு - வாழ்க்கை பாதுகாப்பு" எனும் வாசகத்தை முன்னிறுத்தி இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் அதன் CSR முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று தனது தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் - தொடங்கப்பட்டதாக அறிவித்தது.

சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் வரும் காலங்களில் விபத்து குறையும் என நோக்கில் காஞ்சிபுரம் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பழேனலூர் ஆர்சிஎம் தொடக்கப் பள்ளியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கியது.

இதில் தகுதிவாய்ந்த  அதிகாரி மூலம்  குழந்தைகளுக்குக் ரோல்-பிளேமிங் ஆக்டிவிட்டியும் அதைத் தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு குறித்த ஆடியோ-விஷுவல் ஸ்கிரிப்டும் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது.

மேலும் பேருந்தில் பயணம் செய்வது, பாதுகாப்பான சாலையைக் கடப்பது, சாலை அடையாளங்களைப் புரிந்துகொள்வது, சாலையில் சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்பு மற்றும் கை சமிக்ஞைகளின் பயன்பாடு குறித்த பாதுகாப்புக் குறிப்புகள்  காண்பிக்கப்பட்டது

இதில்  1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை  பயிலும் மொத்தம் 125 குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குள் பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் மேம்படுத்துவதற்காக சாலைப் பாதுகாப்புக் கல்வி குறித்த சிறு புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.

பங்கேற்ற குழந்தைகளுக்கு பென்சில் பெட்டிகள், ஸ்கெட்ச் பேனா மற்றும் க்ரேயான் செட்கள், பேனா, ஸ்கேல் மற்றும் ஒரு பை ஆகியவற்றைக் கொண்ட ஸ்டேஷனரி கிட்களையும் யமஹா  நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது .

இளம் தலைமுறையினர் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் எளிய முறையில்  புரிந்து கொள்வதற்கும், இறுதியில் சிறந்த மற்றும் பாதுகாப்பான நாளைய தினத்திற்கு இட்டுச் செல்வதற்கும் இது போன்ற முயற்சிகள் ஆற்றலைக் கொண்டிருப்பதால்  நிறுவனம் அதன் ஆலை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News