மத்திய அமைச்சர் விழா: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
மத்திய அமைச்சர் விழாவை தி.மு.க., காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு செய்தனர்.;
ரூ.155 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ். ( கல்வெட்டில் விழா புறக்கணித்தவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது) .
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வல்லம் - வடகால் சிப்காட் வளாகத்தில் ரூ. 155 கோடி மதிப்பீட்டில் , நூறு படுக்கையில் கொண்ட அதிக நவீன வசதிகள் உடைய ESIC மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திரயாதவ் மற்றும் இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கலந்து கொள்வதாக அழைப்பிதழ், பேனர்கள் வைக்கப்பட்டது.
நண்பகல் 2 மணி அளவில் விழா தொடங்கியது. மத்திய அமைச்சர் பூபேந்திரன் யாதவ் குத்து விளக்கு ஏற்றி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
விழா முடியும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை மற்றும் மாவட்ட ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளாமல் விழாவை புறக்கணித்தனர்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை குறித்து கோரிக்கை வைத்ததாகவும் குறிப்பிட்டார் . கல்வெட்டு பேனர் உள்ளிட்டவைகளில் இரு மக்கள் பிரதிநிதிகள் பெயர்களும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசோடு சுமூக உறவு நீடித்து பல்வேறு நல திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டிய மக்கள் பிரிதிநிதிகள் விழாக்களை புறக்கணிப்பது வருத்தத்தை அளிப்பதாக விழாவில் கலந்து கொண்டவர் தெரிவித்தனர்.