ஸ்ரீபெரும்புதூர் : 'முட்டை' வாங்கிய இரண்டு அமமுக வேட்பாளர்கள்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் 4வது மற்றும் 12-வது வார்டுகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
பெரும்புதூர் பேரூராட்சி 4வது வார்டில் அதிமுக, திமுக, மதிமுக, நாம் தமிழர், பாமக, பிஜேபி, அமமுக என போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் நிர்மலா 391 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவருடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மதிவாணன் 323 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட கேசவன் 190 வாக்குகளும், பாமக சார்பில் போட்டியிட்ட வினோத்குமார் 23 வாக்குகளும், நாம் தமிழர் சார்பில் பத்மா 31 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசன் 97 வாக்குகளும் பெற்றனர்.
இதில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் கணேசன் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
இதேபோல் 12வது வார்டு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ரமேஷ்பாபு என்பவரும் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
அதேபோல் 6வது வார்டில் போட்டியிட்ட சுப்பிரமணி என்பவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் போட்டியிட்ட அனைத்து அமமுக வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.