வருங்காலத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது : டி.ஆர் பாலு எம்.பி
பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதால் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் டி ஆர் பாலு எம்பி வேண்டுகோள் விடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட சுங்குவார்சத்திரம்,திருமங்கலம்,வடமங்கலம்,பிள்ளைச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிடும் செல்வப்பெருந்தகைக்கு திமுக பொருலாளரும்-நாடாளுமன்ற குழு தலைவரும்மான டி.ஆர்.பாலு அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருமங்கலம் பகுதியில் பேசும் போது , திமுக வருங்காலத்தில் 3.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்க உள்ள தாகவும் , அதில் பெண்களுக்கு சிறப்பு வாய்ப்புகள் உள்ளதாகவூம் , பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்து விலை வாசி கட்டுப்படுத்தப்படும் எனவே கை சின்னத்தில் வாக்களிக்க கோரினார்.
மேலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பதால் முககவசம்அணித்து குடும்பத்திற்கு ஓளிவிளக்காக விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.வாக்கு சேகரிப்பின்போது ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி,தெற்கு ஒன்றிய செயலாளர் நா.கோபால் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளிட்ட திமுகவினர் மற்றுய் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.